பிக்குவிடம் 25 லட்சம் லஞ்சம் கோரிய இருவர் கைது

25 0

மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் பிக்குவிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற முயன்ற குற்றச்சாட்டில் கொழும்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் கோரிய பணத் தொகையிலிருந்து ஆரம்ப கட்டமாக 5 இலட்சம் ரூபா பெற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.