ரஞ்சனின் நாடாளுமன்ற இருக்கைக்கு புதியவர் தெரிவு – சபாநாயகர்

21 0

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற இருக்கை வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற இருக்கை வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரதிவாதியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்காக, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்தில் அஜித் மானப்பெரும, 47,212 வாக்குகளை தனதாக்கிக் கொண்டிருந்தார்.

அஜித் மானப்பெரும, விருப்பு வாக்கு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.