நாடாளுமன்றத்தில் நேர்மையாக செயற்பட முடியாது – ஹேஷா வித்தானகே

22 0

நாடாளுமன்றத்தில் நேர்மையான முறையில் உரையாற்ற முடியும் என்று தமது கட்சியினர் நம்பவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

நாடாளுமன்ற வரப்பிரசாத சலுகைகளைப் பயன்படுத்தி அமைச்சர் மஹிந்தானந்த எந்த அடிப்படையுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ரன்சனின் சட்டத்தரணியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரும் குறிப்பிடப்பட்டது. அவருடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே மஹிந்தானந்த இவ்வாறு செயற்படுகிறார்.

புத்தாண்டு ஆரம்பத்தில் நாட்டில் பல பெரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன, புத்தாண்டைக் கொண்டாடுவதற்குப் பதிலாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் இருக்கும் மக்களின் பிரச்சினையை மறைக்க அரசாங்கம் முயல்கிறது.

ரஞ்சன் மீது அரசு திடீரென வருத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. சபாநாயகர் தார்மீக உணர்வைக் கொண்டிருந்தால், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் கோரிய விடுப்புக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு வழங்கியிருக்க முடியும்.

சபாநாயகர் முதல் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை நீதி நியாயத்திறகாக குரல் கொடுக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் குரலை மடக்க விரும்புகிறார்கள்” என்று ஹேஷா வித்தானகே தெரிவித்தார்.