சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; 24 ஆயிரம் லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டது

406 0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 24 ஆயிரம் லீற்றர் கோடா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்