2017 ஜனவரி மாதமளவில் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகம் ஒன்றை எத்தியோப்பியாவில் திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலேயே இந்த தூதரகம் திறக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்காக ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, எத்தியோப்பியாவில் கடந்த நவம்பர் மாதம் குடியிருப்பாளர்களுக்கான பணியகம் ஒன்று இலங்கை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

