டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

242 0

201612181737325897_miraculously-3-face-lamb-birth-tn-palayam_secvpfடி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தப்படி சென்றனர்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது65). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் 3 ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு இன்று 2 குட்டிகளை ஈன்றெடுத்தது.

இதில் ஒரு ஆட்டுக்குட்டி மிகவும் அதிசயமாக இருந்தது. அந்த ஆட்டுக்குட்டிக்கு 3 முகம் இருந்தது. மேலும் 4 கண்கள் இருந்தது. தலையின் நடுப்பகுதியில் 2 கண்களும், பக்கவாட்டில் 2 கண்களும் இருந்தது.

அப்பகுதி முழுவதும் இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பற்றிய செய்தி பறந்தது. பொதுமக்கள் சுப்பிரமணி வீட்டிக்கு வந்து அந்த 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தப்படி சென்றனர்.