ஐ.எஸ்.எல் கால்பந்து: பெனால்டி சூட்டில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன்

266 0

201612182200336974_atletico-de-kolkata-are-champions-indian-super-league_secvpfஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் அரையிறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 37-வது நிமிடத்தில் கேரள அணியின் ரபி ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக கொல்கத்தா அணியின் சிரினோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தன. ஆனால் இரு அணி வீரர்களின் முயற்சிகளுக்கும் பலன் கிட்டவில்லை. இதனால் இரண்டு முறை தலா 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் கூடுதல் நேரத்திலும் இரு அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து பெனால்டி சூட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெனால்டி சூட்டில் கேரளா அணி 3 கோல்களும், கொல்கத்தா அணி 4 கோல்களும் அடித்தன.

இதன் மூலம் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. கடந்த மூன்று வருடங்களில் கொல்கத்தா அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.