இந்தியாவுக்கும் தஜிகஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம்

258 0

pakistan-indian-talksதீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் தஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தஜிகஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மோன் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

தஜிகிஸ்தான் ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் பிரதமர் மோடி, தஜகஸ்தான் ஜனாதிபதி எமோமலி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.