இரண்டும் கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும் – ஹக்கிம்

354 0

hakemதமது கட்சிக்கு சாதகமான வேட்பாளர் பதவியை பெற்றுத்தரும், பிரதாக கட்சியுடன் ஒன்றிணைத்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்கொண்டு உரையாற்றும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் தாங்களுக்கு அதிக பலம் இருக்கின்ற காரணத்தினால், அங்கு தனித்து போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏனைய பகுதிகளில் பிரதான கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், எவ்வாறாயினும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால் பெரும்வெற்றியினை பெற முடியும் என தாம் கருதுவதாகவும் அமைச்சர் ரவுவ் ஹக்கிம் குறிப்பிட்டுள்ளார்.