1340 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

261 0

5561686raviஉலக வங்கி 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த கடன் தொகையை வழங்குவதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளது. இலங்கை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் நம்பிக்கை இருப்பதனால் இந்த கடன் தொகையை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.