ரஷ்யா தயாரிக்கும் 7 மில்லியன் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொரோனா தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய மருந்தாக்கல் ஆணைக்குழு அவசர பயன்பாட்டுக்காக ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்த மாத தொடக்கத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதியை பரிசாக இலங்கை பெறலாம் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் தன்னுடன் பேசியதாகவும், ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதியை பரிசாகப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

