கம்பஹா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

407 0

கம்பஹா மாவட்டத்தில்  ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா கோவிஷீல்ட் கொவிட்- 19 தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை(13) முதல் வழங்கப்படவுள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசியானது கம்பஹா மாவட்டத்தின் 109 இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ஆம் திகதி 264,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் யுனிசெப் நிறுவனத்தால் கம்பஹா மாவட்டத்துக்கு விநியோகிக்கப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 119,080 பேர் உள்ளனர். இவர்களில் 46,093 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எனவே 72,987 பேருக்கு தடுப்பூசி நாளை முதல் போடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.