களனி கங்கையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பூகொடை முகாம் அதகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி கிரிந்தவல, ரங்வலதொட்டுபொல பிரதேசத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இரத்திணக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

