சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டு

311 0

குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக தவறான ஆதாரங்களை வழங்கியது மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளை இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் கார்னியா பனிஸ்டர் பிரான்சிஸ்ஸுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று சுமத்தியுள்ளது.

அக்காலப்பகுதியில் மாளிகாவத்தையில் வசித்துவந்த விசா அலுவரான கார்னியா பனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு விசா வழங்கியதாகக் கூறி 2019 நவம்பர் 25ஆம் திகதி கறுவாத்தோட்டப்பகுதியில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பலமணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் முறைப்பாடு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.