வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 22 பேருக்கு கொரோனா!

241 0

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய அதிகமான இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என  கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 06 மணியுடன் முடிவடைந்த கடந்த  24 மணி நேரத்தில் இலங்கையில் கண்டறியப்பட்ட 359 பேரில் 22 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் நேற்று மட்டும் 9 ஆயிரத்து 575 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டதை அடுத்து, இவர்களைத் தவிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 337 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில 77 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 34 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 18 பேர், யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட் டங்களில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் பதுளை மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 15 பேர், மொனராகலை மாவட்டத்தில் 13 பேர், கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 12 என்ற அடிப்படையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 09 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 08 பேர், களுத்துறை மாவட்டத்தில் 07 பேர், புத்தளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 06 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் மொத்தமாக 85 ஆயிரத்து 694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.