கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார்

400 0

201612161125269423_dead-man-found-alive-in-mortuary-fridge-in-south-africa_secvpfதென் ஆப்பிரிக்காவில் கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் டர்பன் அருகே உள்ள க்வா மாசு நகரை சேர்ந்தவர் மிசிஷி கிஷே. சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் நடந்த படி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயம் அடைந்த அவரை ஜோகனஸ் பர்க்கில் உள்ள மகாத்மா காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்து பலனின்றி அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

எனவே அவரை அங்குள்ள பிணவறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்தனர். இதற்கிடையே 5 மணி நேரம் கழித்து இறந்ததாக கருதப்பட்ட மிசிஷி மீண்டும் உயிர் பெற்றார்.

அதைப் பார்த்த பிணவறை ஊழியர் அதிர்ச்சியுடன் ஓடோடி வந்து டாக்டரிடமும், இறந்தவரின் உறவினர்களிடமும் தெரிவித்தார். அதை தொடர்ந்து அனைவரும் சென்று பார்த்தனர்.

அப்போது இறந்ததாக கருதப்பட்டவர் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் பரிதாபமாக இறந்தார்.

அவரை முன்கூட்டியே ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தால் உயிர் பிழைத்து இருப்பார் என உறவினர்கள் மனவருத்தம் அடைந்தனர்.