அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

354 0

download-1அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.கொக்கைன் தொகைகளை காலிமுகத்திடலில் வைத்து அழிப்பதற்கு கோரிக்கை விடுப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை காலிமுகத்திடலில் வைத்து பகிரங்கமாக அழித்தமை உதாரணமாக கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்த அவர் மீட்கப்பட்ட கொக்கைன் தொகைகள் விசாரணை நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் 800 கிலோ கிராம் கொக்கைன் தொகைகளை கொழும்பு துறைமுகத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்னரும் 200 கிலோ கிராம் கொக்கைன் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.