‘போதைப்பொருள் வியாபாரமல்ல; பயங்கரவாதம்’

302 0
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சுதந்திர மற்றும் சுயாதீன  நீதித்துறையில்  மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் நடமாடும் சேவையில் பங்கேற்ற  போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும், நாட்டில் 30 வருடங்கள் காணப்பட்ட பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.