ஒருங்கிணைப்புச் செயலாளர் நியமனம்

311 0

பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகள் உற்பத்தி அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புச் செயலாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருமான குணரெட்ணம் ஹரிதரன் (கிரி), இன்று (25) நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனமானது பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவால், அமைச்சின் அலுவலகத்தில் வைத்து  வழங்கப்பட்டது.