நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் தப்பினார்

346 0

201612141433150030_italy-pm-paolo-gentiloni-wins-initial-vote-of-confidence-in_secvpfஇத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாலோ ஜென்ட்டிலோனி-யை அங்கீகரிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரதமருக்கு ஆதரவாக அமைந்தது.

இத்தாலி நாட்டில் பிரதமரை பதவிநீக்கம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை பறிக்கும் புதிய சட்டதிருத்தத்தின் மீது நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரதமர் மட்டியோ ரென்சி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாலோ ஜென்ட்டிலோனி என்பவரை சமீபத்தில் ஆளுங்கட்சியின் தலைமை அறிவித்தது.

இத்தாலி அரசியலமைப்பு சட்டத்தின்படி, புதிய பிரதமராக பதவி ஏற்பவர்கள் அந்நாட்டின் பாராளுமன்ற இரு அவைகளில் உள்ள பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டும்.

இந்நிலையில், பாராளுமன்ற கீழவையில் நேற்று புதிய பிரதமராக பாலோ ஜென்ட்டிலோனி
பதவி ஏற்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் புறக்கணித்த நிலையில், 386 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாலோ ஜென்ட்டிலோனியின் பிரதமர் பதவி தப்பிப் பிழைத்தது.

இன்று பாராளுமன்ற மேலவையில் மேலும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை இவர் சந்திக்க வேண்டியுள்ளது. முன்னாள் பிரதமர் மட்டியோ ரென்சியின் ஆதரவாளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள மேலவையில் நடைபெறும் இன்றைய வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என இத்தாலி ஊடகங்கள் கருதுகின்றன.