சிறீலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக நியமிக்கப்பட்டுள்ளார் என சிறீலங்கா இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் உபய மெடவெல சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்தே அவரின் இந்தப் பதவிக்கு மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக கடந்த நவம்பர் 4ஆம் திகதியிலிருந்து இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

