சிறையிலுள்ள ரஞ்சனைச் சந்திக்கவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!

211 0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் படி இன்று காலை 11மணிக்கு அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் சந்திக்கவுள்ளார்.

நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையிலுள்ள நிலையில், இன்றைய தினம் அவரைச் சஜித் பிரேமதாஸ சந்திக்கவுள்ளார்.

வாரத்தில் ஒருமுறை மாத்திரம் உறவினர் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.