தொழில்திறன்மிக்க மனிதவளம் அவசியம் – ஜனாதிபதி

341 0

z_p05-the-vexed-01-uநாட்டின் புதிய தலைமுறையை தொழில்திறன்மிக்க மனிதவளமாக கட்டியெழுப்புவதற்குத் தேவையான வழிகாட்டலையும் வளங்களையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ, சீனிகம ஸ்ரீ ஜினரத்ன தொழிற்பயிற்சி, மூன்றாம் நிலைக்கல்வி மத்திய நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று எமது நாட்டில் வேலைவாய்ப்புகளுக்கான தகைமை உள்ளவர்கள் தான் பற்றாக்குறையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் துறையில் அதிக தொழில்வாய்ப்புகள் உள்ளபோதும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவுடைய பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாமையே பாரிய பிரச்சினையாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய உற்பத்திப் பொருளாதாரத்தோடு ஏற்படும் தொழிற்சந்தைக்குத் தேவையான நவீன தொழிநுட்ப அறிவுடன் கூடிய பயிற்சிகளைப் பெற்ற ஊழியர்களை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.