வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க ஆகியோரது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்படி அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கொலை இடம்பெற்ற தினத்தன்று வசீம் தாஜூதீனின் வாகனத்தை பின் தொடர்ந்த வாகனம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் இன்று நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.

