மணியை சந்தித்த சுவிஸ் தூதுவர்!

189 0

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் பேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று (18) பிற்பகல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர், பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையில் நேற்று, நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதோடு மாநகர முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.