மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல்

167 0

10.6 மில்லியன் ரூபாய் செலவில் தாண்டிக்குளம் கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல்லினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் ந.துரைராஜசிங்கத்தினால் நாட்டிவைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் ந.துரைராஜசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன், நகரசபை தலைவர் இ.கௌதமன், பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.