2017ஆம் ஆண்டு புதிய திட்டங்கள் உள்வாங்கப்படும் – விக்னேஸ்வரன் (காணொளி)

390 0

cm-voiceநிதிமூலங்களுடான புதிய திட்டங்கள் 2017ஆம் ஆண்டு உள்வாங்கப்பட இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர். விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 69வது அமர்வில் 2017ஆம் ஆண்டிற்கான அறிமுக உரை ஆற்றும் போது இதனைக் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு பல நிதிமூலங்களினூடாக 5 திட்டங்கள் உள்வாங்கப்பட இருப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைக்கப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டம், கிராமிய பாலங்கள், விவசாய துறையினை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம், நிறுவனங்களின் இயலளவை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.