வன்முறையைத் தூண்டும் கத்தோலிக்க திருச்சபைகள்! இந்துக்கள் மீது வன்மத்தைப் பரப்பியதால் புகார்!

196 0

இந்துக்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாக சர்வதேச அமைப்புகளுக்கு தவறான தகவல் அளிப்பதாக ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா கத்தோலிக்க திருச்சபை மீது புகார் எழுந்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபை ₹24 கோடி வெளிநாட்டு நிதி பெற்று அதை பழங்குடியினரை மதம் மாற்ற பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவின் கத்தோலிக்க திருச்சபை வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைப் பயன்படுத்தி இந்தியாவைப் பற்றியும் இந்துக்களைப் பற்றியும் அவதூறு பரப்புவது தெரிய வந்துள்ளது. பொதுவாக கிறிஸ்தவ மத அமைப்புகள் தாங்கள் இந்தியாவில் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பரப்புரை செய்வது வழக்கம் என்றாலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைப் பயன்படுத்துவது FCRA விதிகளை மீறுவதாக அமையும்.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெற அவசியமான FCRA உரிமத்தை பெற்றுள்ள கும்லா கத்தோலிக்க திருச்சபை, இந்த வகையில் கிட்டத்தட்ட ₹24 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இந்த நிதியை FCRA விதிகளை மீறி, இந்தியாவைக் குறித்தும் இந்துக்களைக் குறித்தும் ஆதாரமற்ற, தவறான தகவல்களை உலக அரங்கில் பரப்பியதாகவும், தாங்கள் ஒடுக்கப்படுவதாக சர்வதேச அமைப்புகளுக்கு பொய்யான தகவல்களை அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஸ்டேன் சுவாமி என்ற சமூகப் போராளி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்லா திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் போராட்டம் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. ஸ்டேன் லூர்து சுவாமி என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெசூயிட்(Jesuit) பாதிரியார். Jesuit பாதிரியார்கள் Liberation Theology என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்.

இவர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது போல் இந்துக்கள் இடையே சமூகப் போராளிகளாக ஊடுருவி, அவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பல இடங்களில் தாங்கள் பாதிரியார்கள் என்பதை மறைத்து Jesuit பாதிரியார்கள் சமூகப் போராளி வேடத்தில் செயல்பட்டு வருகின்றனர்.