நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், நேற்று இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருடன் இணைந்து அதிரடிப் படையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.
லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் புதல்வர் உட்பட ஐவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள், சிவனொளிபாத மலைக்கு சென்றுவிட்டு பின்னர், எமில்டன் காட்டுக்கு போயுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று இரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரும் அதிரடிப் படையினரும் மூன்று குழுக்களாக பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

