4 அமைச்சக செயலாளர்கள் மற்றும் 2 தூதுவர்களின் நியமனத்துக்கு அங்கீகாரம்

307 0

நான்கு அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் இரு நாடுகளுக்கான தூதர்கள் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் உள்ள உயர் பதவிகள் குழு முன் அவர்களின் தகுதிகளை ஆராய்வதற்காகப் பரிந் துரைக்கப்பட்ட பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி மீன்வளத்துறை அமைச்சின் செயலாளராக மாபா பதிரனவும், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளராக அனுராதா விஜேகூனும், சுகா தார அமைச்சகத்திற்கு மேஜர் ஜெனரல் சஞ்சீவா முன சிங்கவும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், நைஜீரியாவிற்கான புதிய இலங்கை தூத ராக ஜே.எம்.ஜே.பி பண்டாராவையும், சீஷெல்ஸுக்கு ஸ்ரீ மல் விக்ரமசிங்க வையும் நியமிக்க உயர் பதவிகள் பற்றிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.