கம்பஹா நகரில் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

185 0
கம்பஹா நகரில் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசத்தின் ஒரு பகுதியை மூட தீர்மானித்துள்ளதாக கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக குறித்த விற்பனை நிலையங்களை அண்மித்து கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் 280 க்கும் அதிகமான என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 58 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்தார்.