குடா நாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுகின்றன -ஸ்ரீதரன்

201 0

குடா நாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நெடுந்தீவு, அனலைதீவு, எழுவ தீவு, நைனா தீவு ஆகிய இடங்களுக்கு இதுவரையில் வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு அனுப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, பதவியனியுடைய செயற்பாட்டில் வைத்தியர்களின் தேவை கடல் கடந்த தீவுகளுக்கு அவசியம். அத்தோடு அங்கு பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த செல்கின்றனர். அவர்களுக்கு சம்பளம் குறைவாகவே காணப்படுகிறது.

எனவே அவர்களுக்கு ஊக்குவிப்பை வழங்குவதற்காக கொடுப்பனவினை வழங்க முடியுமா? இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.