தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

382 0

imagesதனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.பேருவலை பிரதேசத்தில நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போக்குவரத்து ஒழுக்க விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அபராத தொகையை நீக்குமாறு தெரிவித்து மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் இவ்வாறு மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் 3 தினங்களின் பின்னர் அவர்களது பஸ் அனுமதிப்பத்திரங்களை தடைசெய்து, புதிய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கவேண்டும் அல்லது சகல தனியார் பஸ்களையும் அரசுடைமையாக்கவேண்டும்.

பிரதான பாதையில் போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்படும் வாகன சாரதிகளுக்கு எதிராக வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட தண்டப்பணத்தை கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும். நான் எதனையும் மறைத்தோ வேறு யாரிலும் மறைந்து இருந்துகொண்டோ பேசமாட்டேன். அத்துடன் போதையுடன் மற்றும் சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதால் பாரியளவில் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.