
தொடர் சந்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹம்பாந்தோட்டை – மாஹம்புர துறைமுக பணியாளர்கள், இன்று துறைமுக பிரதான நுழைவாயிலின் முன்னால் பூரணை தின வழிபாட்டுடன் கூடிய போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியாளர்கள் இன்றுடன் 7வது நாளாக தமது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
தம்மை துறைமுக அதிகார சபைக்கு இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில், இது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்கப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என மஹாம்புர துறை முக குழுவின் தலைவர் ஐ.கே ஒமேஸ் தெரிவித்தார்.

