இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது: இஸ்ரேல் பிரதமர்

272 0

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றது. அப்போது சில கார்கள் சேதமடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இஸ்ரேல் பாதுகாப்பு ஆலோசகர் மெய்ர் பென்-ஷபாட்டை தொடர்பு கொண்டு குண்டு வெடிப்பு சம்பவம், நடைபெற்று வரும் விசாரணை குறித்து விவரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்துவார், இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்பதில் முழு நம்பிக்கை உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.