அச்சுறுத்தல்கள் காரணமாக அரசாங்கத்தின் கருத்துக்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிடுவதுடன் எதிர்கட்சியினரின் கருத்துக்களை வெளியிட மறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுவருகின்றது.
நாட்டு மக்கள் அது தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எனினும் ஊடகங்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
இதனால் ஊடகங்களின் நிலைப்பாடுகளில் பாரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

