இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி

204 0

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர்.

இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 அதிகாரிகள் உட்பட 138 பேரே இது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4105 ; பேர் குண்மடைந்துள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 388 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய 134 சிறைச்சாலை அதிகாரிகள் , 489 ஆண் சிறைக் கைதிகள் , 11 பெண் சிறைக் கைதிகள் , 3ஆயிரத்து 520 ஆண் விளக்கமறியல் கைதிகள் , 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.