ட்ரம்ப்பினால் இலங்கைக்கு சாதகம்

290 0

625-500-560-350-160-300-053-800-900-160-90அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள், இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் கொண்டுள்ள கொள்கையினால் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்படவுள்ள ஆட்சிமாற்றத்தினால், இலங்கையின் ஆடைத்தொழில் துறை தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கேப்பிடல் அல்லையன்ஸின் மூலோபாய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 44 வீதத்தை அமெரிக்காவே கொள்வனவு செய்கிறது.

மேற்குலகில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளமை ஆகியவற்றினால் இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அமெரிக்காவில் நிறுவனங்களை அமைத்து உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலேயே ட்ரம்ப் கவனம் செலுத்துவார்.

மெக்சிகோ மற்றும் சீனா மீது அவர் தடைகள், கட்டுப்பாடுகளை விதிப்பாரேயானால் அது இலங்கைக்கே உண்மையில் நன்மையாக இருக்கும்.

இந்த இரண்டு நாடுகளும் ஆடை தயாரிப்புத் துறையில் முக்கிய பங்கு வகிப்பவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.