மதுரவாயல் பறக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

365 0

gk-vasanதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
2006ம் ஆண்டு மத்திய அரசு, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18.3 கிலோ மீட்டர் தூரம் வரை 4 வழி பறக்கும் சாலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2009ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசு இந்த திட்டத்திற்காக தமிழக அரசுக்கு நிதி உதவி அளித்தது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம், சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை எளிதில் கையாளலாம்.
ஆனால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 2012ல் தமிழக அரசின் பொதுப்பணித்துறை இத்திட்டத்திற்கு தடை விதித்தது.

இத்திட்டம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2009 முதல் 2016 வரை இத்திட்டப்பணிகள் நடைபெறாமல், முடக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் கூடுதலானது, தற்போது தமிழக அரசு இத்திட்டத்தில் மாற்றங்களை செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த முக்கிய முடிவை காலம் தாழ்ந்து எடுத்திருந்தாலும் மக்கள் நலன், பொது நலன், துறைமுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.