கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு 20ம் தேதி கூடுகிறது

361 0

201612060410525678_i-offer-deep-condolences-on-the-passing-away-of_secvpfதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.  பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.,  எம்.எல்.ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.  இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பரபரப்பாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:  திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 20ம் தேதி காலை 10  மணியளவில் திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும்  தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கழக ஆக்கப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.