2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

350 0

asfaf12017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் பதியப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்கெடுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வாக்கெடுப்புக்கு நாமல் ராஜபக்ஸ, மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.