யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டாவது நாளாகளும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்! -காணொளி இணைப்பு

82 0

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருதனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் அறிவித்தல் விடுத்திருந்தது.

இதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள தீர்வு கிடைக்கும் வரை உண்வு தவிர்ப்பு போராட்டம் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.