பாதீடு தோல்வி: அமைச்சர் இராஜினாமா செய்ய முஸ்தீபு

433 0

resign-720x4802017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் (பாதீடு) மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது. இந்நிலையில், தென் மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சு மீதாக நிதியொதுக்கீட்டு, நேற்று வெள்ளிக்கிழமை தோல்வியடைய செய்யப்பட்டது.

பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு தலைவணங்கி, தனது பதவியை, அடுத்தவாரம் இராஜினாமா செய்துகொள்ளவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் யு.ஜி.டி ஆரியதிலக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சியும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுமே இணைந்து தன்னுடை அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டை தோல்வியுற செய்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் (பாதீடு) மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.