க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் தோற்றிய 74 வயதான மூதாட்டி

273 0

exam-1கல்விக்கு வயது தடையல்ல என்பதை 74 வயதான மூதாட்டி ஒருவர் இன்று நிரூபித்துள்ளார்.

பல வருட முயற்சியின் பெறுபேறாக கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பரீட்சையில் இந்த மூதாட்டி இன்று தோற்றினார்.தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த மூதாட்டியின் நீண்ட கால நோக்கமாக அமைந்திருந்தது.

நாணாயக்கார ஹேவா அத்தபத்து சூரியரத்ன கல்யாணவதி எனும் இந்த மூதாட்டி, மாத்தறை நாவிமன பிரதேசத்தைச் சேர்ந்தவர்.1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1956 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையாகத் தோற்றினார்.

சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடைந்த அவருக்கு, கூட்டுறவு திணைக்களத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது.அதிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தனியார் துறையில் கடமையாற்றியதுடன், ஆறு மாதங்களுக்கு முன்னரே அதிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார்.அவரின் இந்த செயற்பாடுகளுக்கு 80 வயதான அவரின் கணவரே ஒத்துழைப்பாகவுள்ளார்.2017 ஆம் ஆண்டு இலத்திரனியல் பாடநெறிக்கான பரீட்சையில் தோற்றுவதே அவரின் அடுத்த இலக்காகும்.