பா.ஜனதா மீது பாசம்: நடிகை கவுதமி அரசியலில் குதிப்பாரா?

310 0

gouthami9991முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியுள்ளார். இது அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான அடித்தளமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

நடிகை கவுதமி சமூக சேவை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.இதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.உடல்நிலை காரணமாக நீண்ட நாட்களாக சினிமாவில் கவுதமி நடிக்கவில்லை. பின்னர் ‘பாபநாசம்’ மற்றும் ஒரு மலையாளபடத்தில் நடித்தார்.நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த கவுதமி சமீபத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார். அவரது மகளின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

இதனால் மகளை சினிமாவில் நடிக்க வைப்பார் என்று கூறப்பட்டது. கவுதமி இதை மறுத்தார். தனது மகள் தற்போது நடிக்கவில்லை. படிப்பில்தான் கவனம் செலுத்துகிறார் என்று கூறினார். கவுதமியும் புதிய படங்களில் நடிக்கவில்லை.இந்த நிலையில், கவுதமி அக்டோபர் மாதம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் உதவி செய்து வரும் தனது இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.

கவுதமிக்கு மோடி சில ஆலோசனைகளை வழங்கினார். 2017-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தில் நிகழ்ச்சி நடத்த பிரதமரின் ஒத்துழைப்பை கேட்டதாகவும் தனது இயக்கம் மூலம் கல்வி, அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாகவும் கவுதமி தெரிவித்தார்.

பிரதமரை கவுதமி சந்தித்ததையடுத்து அவர் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை.இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரை கவுதமி ஏற்கனவே சந்தித்து இருக்கிறார். எனவே, அவரது இந்த நடவடிக்கை, அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான அடித்தளமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு இந்த பிரச்சனை மூலம் தமிழக அரசியலில் ஈடுபட கவுதமி தயாராகி விட்டதற்கு இந்த கடிதமே உதாரணம். அவர் பாரதிய ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.