பல்வேறு சிறு குற்றச் செயல்களுக்காக சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் 400 கைதிகளுக்கு ஜேசு பாலகன் பிறந்த தினமான நத்தார் தினத்தில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன விடுவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக நாட்டிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலை உட்பட அனைத்துச் சிறைச்சாலை களிலிருந்தும் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலைசெய்யும் நபர்களை சிறை அதிகாரிகள் தெரிவுசெய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலிருந்தும் இதற்காக ஆக்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

