வெளிநாட்டு யுவதியின் பணத்தை கொள்ளையிட்ட விருந்தக பணியாளர்.

479 0

arrest_1_0_mini-720x480சுற்றுலா விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு யுவதியின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர் மாரவில காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாரவில கடற்பகுதியில் அமைந்துள்ள குறித்த சுற்றுலா விருந்தகத்தில் பணியாற்றும், மினுவான்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெலருஸ் நாட்டைச் சேர்ந்த 27 வயதான பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபரின் வீட்டில் இருந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் 20 யூரோக்கள், 100 டொலர்கள் மற்றும் 8000 ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.