பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

268 0

hqdefault-3கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேபோன்றே, கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவுப் பிரதேசத்தினையும் அப்பகுதி மக்கள் மீள் குடியேறமுடியாத நிலையிலும், அவர்களது தொழிலை மேற்கொள்ளமுடியாத வகையிலும் கடற்படையினர் அபகரித்து வைத்துள்ளனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கில் யுத்தம் நிறைவடைந்துள்ளபோதிலும், தற்போதும் இராணுவத்தினர், பாடசாலைகள், தனியார் காணிகள், ஆலயங்கள் ஆகியவற்றில்நிலைகொண்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.