சில குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன

334 0

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலிருந்து விடு விக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி லெப் டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு -முகத்துவாரம் – மெத்சந்த உயன , மட்டக்குளி -ரன்திய உயன, முகத்துவாரம் -மிஹி ஜய செவன, கிராண்ட்பாஸ்- மோதர உயன, கிராண்ட் பாஸ் – சமகிபுர, தெமடகொட மிஹிந்துசெத்புர ஆகிய தொடர் மாடிக் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.