இன்று மழையுடனான வானிலை நிலவும் – வளிமண்டல வியல் திணைக்களம்

352 0

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானி லை நிலவுமென வளிமண்டல வியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் காலை வேளைகளில் மழை வீழ்ச்சி பதிவாகும் இடியுடன் கூடிய மழை பெய் கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் எனவும் வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல த்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக 2 ஆயிரத்து 131 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 128 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வட மாகாணத்தில் 2 ஆயிரத்து 122 குடும்பங் களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 100 பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 4 வீடுகள் முழுமையாகச் சேதமடைந் துள்ளதோடு 280 வீடுகள் முழுமையாகச் சேதமடைந் துள்ளன.

 

அத்துடன் வட மாகாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர்.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புகள் பதிவா கியுள்ளன.

இதேவேளை மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 9 குடும்பங்களைச் சேர் ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந் துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.